வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று, அபராதமின்றி, தணிக்கை செய்யக்கூடிய கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டது.

இன்று வரை அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்யலாம். இன்று கணக்கு தாக்கல் செய்யாத ரூ.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி, நாளை முதல் கணக்கு தாக்கல் செய்யலாம். வருகிற மார்ச் 31-ந்தேதிக்கு பின் கணக்கு தாக்கல் செய்ய முடியாது.