இன்றைய ராசி பலன்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதில் நிதானமும் பொறுமையும் கடை பிடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். 

ரிஷபம்:

உங்களுடைய குடும்பத்தில் நீங்கள் முக்கியமான நபராக விளங்குவீர்கள். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களின் படிப்பில் மிகுந்த அக்கறை தேவை.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும் நாளாக இன்று உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு எதிர்பார்த்த பண உதவி நண்பர்களால் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. எந்த ஒரு விஷயத்தை முயற்சி செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும்.

கடகம்:

நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியில் முடியும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது வரலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டு.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது.

கன்னி:

வேலை தேடுபவர்களுக்கு நாளின் முற்பகுதியில் நல்ல பலன் கிட்டும் புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும்.

நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு காண சுமூகமான சூழ்நிலை நிலவும் வேலையில் நல்ல பெயர் கிடைக்கும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலம் எது என்பதை தெரிந்து செயல்பட முயற்சி செய்வீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்:

சகோதர சகோதரிகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை மதித்து நடந்தால் தான் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை பளு அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு.

தனுசு:

நீங்கள் எடுக்கக் கூடிய புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தந்தை வழி உறவினர்களில் மூலம் உதவிகள் கிடைக்கும்

மகரம்:

நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி லாபம் அதிகரிக்கும்.

கும்பம்:

உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும் மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும் திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணிபுரியும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.