இன்றைய ராசி பலன்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி பெறலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்:

உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள் வங்கி தொழில் விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

நேயர்களுக்கு இன்றைய நாள் வருமானத்தை தரக்கூடிய நல்ல நாளாக அமையும் பெண்களுக்கு சிறு சிறு மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

கடகம்:

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள் பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் ஒரு சில பிரச்சனைகள் வந்தாலும் பெரிதாக மனதை பாதித்தது என்று இல்லை உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்:

புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை தொடர்பான தகவல்கள் சற்று காலதாமதம் ஆகும். இருப்பினும் நாளை நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது பெண்களுக்கு இனிமையான நாளாக இன்றைய நாள் அமையும். குடும்ப ஒற்றுமை மேம்படும். பிறந்த வீட்டில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உடைய நல்ல நாளாக இன்றைய நாள்.

கன்னி:

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் நீண்ட நாள் தாமதப்படுத்த பட்ட பல காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும் உடல் நலம் நன்றாக இருந்து வரும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.

துலாம்:

கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக மாறும் விநாயகர் வழிபாடு மேலும் வெற்றியை குறிக்கும் பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தந்தை வழியில் வந்த பிரச்சனைகள் நீங்கும். மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு மறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் விட்டுக்கொடுத்து செல்வது நலமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் குறையும்.

தனுசு:

பிரயாணங்கள் தொடர்பான திட்டமிடுதல் இருக்கும். பெண்களுக்கு இனிமையான நாள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி மேம்படும் உடல் நலம் சீராக இருந்துவரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மகரம்:

சொந்த தொழில் முயற்சிகள் சற்று காலதாமதமாகும். சுயதொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பது மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது.

கும்பம்:

வீட்டிற்கு தேவையான நல்ல பொருட்கள் வாங்குவது, சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. பங்குவர்த்தகத்தில் வங்கித் துறை சேவைத் துறை தங்கம் மற்றும் இரும்பு, காப்பர் போன்றவற்றின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உண்டு மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

மீனம்:

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வருவதற்கான நாள் ஆகும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும் முருகப் பெருமான் வழிபாடு மேலும் வெற்றியை குவிக்கும்.