இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று (பிப்ரவரி 13) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,468 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,466 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 35,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 16 ரூபாய் உயர்ந்து 35,744 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.4,8,50லிருந்து இன்று ரூ.4,852 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 38,800 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 16 ரூபாய் உயர்ந்து 38,816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.