பட்ஜெட் அறிவிப்புக்கு பின் தொடர் சரிவில் தங்கம் விலை

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கம் விலை 4வது நாளாக இன்று சவரனுக்கு ரூ.256 குறைந்தது. தங்கம் விலையில் கடந்த சில மாதமாக ஏற்றம் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 28ம் தேதி ஒரு சவரன் 36,944க்கு விற்கப்பட்டது. 29ம் தேதி 37,104க்கும் விற்கப்பட்டது.

கடந்த 30ம் தேதி ஒரு கிராம் 4,655க்கும், சவரன் 37,240க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரன் 296 அளவுக்கு அதிகரித்தது. இது நகை வாங்குவோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.72 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72-க்கு விற்கிறது.