இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.34,136-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.34 ஆயிரத்து 136-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 267 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 உயர்ந்து ரூ.70 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.70-க்கு விற்கிறது.

நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.33 ஆயிரத்து 296-க்கு விற்றது. இதனால் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 நாட்களில் பவுனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.