பாஜகவாக மாறும் பாமக – திருமாவளவன்

பாமக என்பது இப்போது பாஜகவாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும் மாம்பழத்தில் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு தான் வலிமை தருமே தவிர உங்களுக்கு வலிமை சேர்க்காது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ராதா கிருஷ்ணன், திட்டக்குடி திமுக வேட்பாளர் கணேசனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாமக என்பது இப்போது பாஜகவாக மாறிக்கொண்டிருக்கிறது. மாம்பழத்தில் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்குதான் வலிமை தருமே தவிர, உங்களுக்கு வலிமை சேர்க்காது. தமிழ்நாட்டில் பாகவின் சின்னம் தாமரை மட்டும் அல்ல, பாஜகவுக்கு 3 சின்னங்கள் இருக்கின்றன.