தங்கம் சவரனுக்கு 256 ரூபாய் அதிகரிப்பு

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 101 ரூபாய் குறைந்து, 48,180 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையையும், இன்று அதே விலையில் தொடங்கியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் தற்போதைக்கு குறைந்திருந்தாலும், மீண்டும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 32 ரூபாய் அதிகரித்து, 4,562 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து, 36,496 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலையினை போலவே, ஆபரண வெள்ளி விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு, 72.21 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 72,210 ரூபாயாகவும் காணப்படுகிறது. நேற்று வெள்ளி விலையானது சற்று அதிகரித்திருந்த நிலையில், இன்றும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.