covid cases in tn:தமிழகத்தில் இன்று 710 பேருக்கு கொரோனா !

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று 710 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,00,149. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 27,31,945.

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.

சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 128.இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 69,21,015 பேர் வந்துள்ளனர்.tn corona cases

தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 246 தனியார் ஆய்வகங்கள் என 315 ஆய்வகங்கள் உள்ளன.இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,87,414.