தமிழகத்தின் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்நிலையில்,தற்போது கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 1,819 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,46,689.ஆக உள்ளது.மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,88,775. ஆக உள்ளது.

இன்று சென்னையில் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 27 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.