பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்படும் குடியரசுத் தலைவர் மாளிகை !

கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 14 முதல் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக 2021 ஆகஸ்ட் 1 முதல் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகம் திறக்கப்படுகின்றன.

காலை 10.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 12.30 முதல் 1.30 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட மூன்று நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 25 பேர் என சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றுலா அனுமதிக்கப்படும்.

செவ்வாய் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஆறு நாட்களில் காலை 9.30 முதல் 11 மணி வரை, காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட நான்கு நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 50 பேருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியக வளாகம் திறந்திருக்கும்.