கடந்த 24 மணிநேரத்தில் 1,591 பேருக்கு கொரோனா !

covid cases
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் நேற்று 1,509 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,519 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

1,51,784 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,519ஆக உள்ளது. சென்னையில் இன்று 212 ஆக தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

கொரோனாவால் இன்று 27 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,217ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,37,010. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,46,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,85,244.

இதையும் படிங்க : பிரபல நடிகர் வீட்டு திருமண விழாவில் நகை திருட்டு

இதையும் படிங்க : அடுத்து வருகிறது டெங்கு ஆபத்து !