தமிழகத்தில் இன்று 1,893 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 1,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 1,930 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,24,400 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,367 ஆக அதிகரித்துள்ளது.