கடந்த 24 மணிநேரத்தில் 1,653 பேருக்கு கொரோனா !

coronavirus
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் நேற்று 1,669 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,653 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

1,55,648 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,653ஆக உள்ளது. சென்னையில் இன்று 204 ஆக தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

கொரோனாவால் இன்று 22 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,310ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,43,683. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,47,478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்தார் !