தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் !

தமிழகத்தில் இன்று 3,479 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,03,481.

இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 44,66,866 பேர் வந்துள்ளனர்.சென்னையில் 209 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,041 பேர். பெண்கள் 1,438 பேர்.இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 73 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.