குரூப்-1 தேர்வு இன்று தொடக்கம்!!!

private-schools-should-not-conduct-12th-std-lessons-for-11th-std-students
பள்ளிகளுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில், முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலைத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 66 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில், தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவிகளுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், தேர்வு எழுதுபவர்களுக்கு புதிதாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 10 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில், தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்கு செல்ல வேண்டும் என்றும், கருப்பு நிற பந்துமுனை பேனாக்களை மட்டுமே விடைகளை குறிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாளில் இரு இடங்களில் கையொப்பமிட்டு இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.

விடை தெரியாத பட்சத்தில் ஐந்தாவதாக கொடுக்கப்பட்டிருக்கும் E என்கிற தேர்வினை குறிக்க வேண்டும், தேர்வர்களுக்கான பதிவு எண்ணை தவறாக பதிவு செய்தால் 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.