TN Urban Local Body Polls 2022 : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்

tn-urban-local-election-2022
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்

TN Urban Local Body Polls 2022 : தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது .

காலை 11 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 21.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் காலை 11 மணி நிலவரப்படி 17.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார்.சென்னை ஆழ்வார்பேட்டை 2வது சாலையில் மக்கள் நீதி மய்யம் அலுவலகம் அமைந்துள்ளது. அதே சாலையில் வாக்குச்சாவடி மையமும் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எமக்கு வாக்களிப்பவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம். எங்கள் தகவல்களின்படி 21 மாநகராட்சிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக சனிக்கிழமை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும்.TN Urban Local Body Polls 2022

தேர்தலை அமைதியாகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக மற்ற ஏற்பாடுகளுடன் சுமார் 1 லட்சம் போலீசார் இன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 31,150 வாக்குச்சாவடிகளில் முக்கியமானவை/பாதிக்கப்படக்கூடியவை கண்டறியப்பட்டு அதற்கேற்ப கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க :petrol and diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

இதையும் படிங்க :drinks for clear skin : ஆரோக்கியமான சருமம் பெற ஹோம் மேடு ட்ரிங்க்ஸ்

இதையும் படிங்க : BA.2 subvariant of Omicron : ஓமிக்ரானின் BA.2 துணை மாறுபாடு பரவல்

(makkal needhi maiyam thalaivar kamalhassan cast his vote )