தமிழகத்தில் நேற்று சதமடித்த வெயில் !

தமிழகத்தில் கோடை கத்திரி வெயில் மக்களை வாட்டி வருகிறது.ந்த வகையில் நேற்று ஒரே நாளில் 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

இந்த நிலையில் நேற்று 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக, மதுரை, வேலூரில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

கடலூா், திருச்சியில் தலா 104 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரி, கரூா் பரமத்தி, சேலத்தில் தலா 101 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், நாகப்பட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதுதவிர, புதுச்சேரியில் 102 டிகிரி வெப்பநிலை காணப்பட்டது.