TN cm stalin : நீலகிரி மாவட்டம், குன்னூரில் ராணுவ உயரதிகாரிகளுடன் சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குளானது.
ஹெலிகாப்டரில் ராணுவ உயரதிகாரி ஒருவர் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தலைமையில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் முன்னதாக தகவல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 4 பேர் விபத்தில் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் நீலகிரி மாவட்ட கலெக்டர் அமரித்தை, தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தார்.Tn cm stalin moving to coonor
ஆய்வு செய்ய முடிவு செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்று மாலை 5 மணிக்கு கோவை விரைகிறார், என்று தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க : 4.5 day workweek : வாவ்..சூப்பர் வாரத்திற்கு 4.5 நாள் வேலை !



