Army Helicopter Crash: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்(Bipin Rawat), அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மித்குலிஹா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருன் சிங் படுகாயங்களுடன் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN cm stalin : குன்னூர் செல்லும் தமிழக முதல்வர் !
நீலகிரி மாவட்டம், குன்னூரில் ராணுவ உயரதிகாரிகளுடன் சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குளானது.
ஹெலிகாப்டரில் ராணுவ உயரதிகாரி ஒருவர் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தலைமையில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் முன்னதாக தகவல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 4 பேர் விபத்தில் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் நீலகிரி மாவட்ட கலெக்டர் அமரித்தை, தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தார்.Tn cm stalin moving to coonor
ஆய்வு செய்ய முடிவு செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்று மாலை 5 மணிக்கு கோவை விரைகிறார், என்று தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: Army helicopter crash: ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் உயிரிழப்பு



