தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

tn govt updates : பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை
பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை

கரூர் மாவட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது ‘தேசத் தந்தை’ என்று அனைவராலும் அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியன்று காந்தி ஜெயந்தி ஆக கொண்டாடுகிறோம். காந்தி ஜெயந்தி தேசிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தினத்தன்று காந்தியடிகளை நினைவு கூறும் வகையில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தபட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

இந்த வருடம் கரூர் மாவட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி புலியூர் கவுண்டம்பாளையம் எம்.ஏ.எம். ராமசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 3 மணிக்கும் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 3,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 2,000 என வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் பங்கேற்றவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தெரிவு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூபாய் 2,000 வீதம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு பள்ளி மாணவர்கள் சிறப்பான முறையில் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் முதன் முறையாக டிஜிட்டல் பிரசாதம்