தமிழகத்தில் முதன் முறையாக டிஜிட்டல் பிரசாதம்

தமிழகத்தில் வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஊர் தஞ்சாவூர். இங்கு தான் பிரசித்திபெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமாக வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதை தடுக்க இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் சார்பில் இந்தக் கருவி கோவிலுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவிலில் நேர்த்திக்கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் .

அந்த தண்ணீர் பிரசாத தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக இந்தக் கருவி புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் தான் அமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய். இதில், தேங்காய் தண்ணீரை சுத்திகரித்து, 50 லிட்டர் வரை நீரை சேமித்து கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.

இதையும் படிங்க: திருப்பதியில் நயன்தாரா சுவாமி தரிசனம்