tn news : பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

tn-news-schools-and-colleges-holiday-tomorrow
பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

tn news : இந்து கடவுளான சிவபெருமானின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இரவு. சிவராத்திரி இந்தியா முழுவதும் மற்றும் நேபாளம் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள இந்து மக்களிடையே உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்து புராணங்களில், நாட்காட்டி சில முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள கதைகள் பெரும்பாலும் வெவ்வேறு சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களிலிருந்து வேறுபடுகின்றன.

சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம். அதன்படி, இந்த ஆண்டு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா சிவராத்திரி வருகிறது.

மார்ச் 1ம் தேதியான நாளை சிவராத்திரியை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயம் செல்ல பல மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவன் கோயில்களுக்கு வருவது வழக்கம்.tn news

நாளை பல இடங்களிலிருந்து வரும் பக்தர்கள் சிவாலயம் ஓட இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் மாநில அரசு பணியாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : how to get naturally strong hair : அடர்த்தியாக முடி வளர்க்க வேண்டுமா