how to get naturally strong hair : அடர்த்தியாக முடி வளர்க்க வேண்டுமா

how-to-get-naturally-strong-hair
அடர்த்தியாக முடி வளர்க்க வேண்டுமா

how to get naturally strong hair :  தலை முடி என்பது நம்முடைய அழகை மெருகேற்ற உதவும் ஒரு முக்கியமான பகுதி என்பதில் மாற்று கருத்து இல்லை. இது பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் தான். அதனால் முடியை பராமரிப்பதில் ஆண்களும் பெண்களும் அதிகம் மெனக்கெடுவதுண்டு.

தலை முடியினால் மீண்டும் உங்கள் நாள் மோசமானதாக அமைந்துள்ளதா? ஆரோக்கியமான தலை முடி என்ற வெற்றிகரமான மகுடம் உங்கள் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றிவிடும். கீழ்கூறிய எளிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் தலை முடி ஆரோக்கியமாக இருக்கும்.

தலை முடி வறட்சியாகவும், சுருண்டு கொள்ளவும் செய்தால், வாரம் ஒரு முறை சூடான எண்ணெய் மசாஜ் செய்யுங்கள். அதனை தொடர்ந்து சாதாரண ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி குளியுங்கள். அளவுக்கு அதிகமான கலரிங், இரசாயனங்கள் மூலம் முடியை நேராக்குதல் அல்லது சுருட்டி விடுதல் மற்றும் இதர ரசாயன சிகிச்சைகளை சில வாரங்களுக்கு மூட்டை கட்டி வையுங்கள்.

உச்சந்தலை மீது கூடுதல் அக்கறை கொள்வது கூந்தல் பராமரிப்பு முறையின் முக்கிய அங்கமாகும். தலைமுடியின் நீளத்தை குறைத்தால் உச்சந்தலையில் அதிக கவனம் செலுத்த தொடங்குங்கள். ரசாயன பயன்பாடு அதிகம் கொண்ட அழகு மற்றும் கூந்தல் தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்கள். அதற்கு பதிலாக ஹேர் ஜெல் உபயோகிப்பது கூந்தலுக்கு அழகு சேர்க்கும். ஆனால் அது உச்சந்தலையில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தக்கூடும். அதனை தவிர்க்க கூந்தலுக்கு அடிக்கடி மசாஜ் செய்யும் வழி முறையை பின்பற்றுவது நல்லது. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றுவது கூந்தல் அழகுக்கும் வழிவகுக்கும்.

தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.hair oil for strong hair growth

கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.how to get naturally strong hair

கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும் நரையும் மாறும்.