TN news : புதுக்கோட்டையில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப்.வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்ட போது தவறுதலாக ஒரு சிறுவன் மீது பாய்ந்தது.உடனடியாக சிறுவன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.துப்பாக்கிச் சூடு தளத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் (சிஐஎஸ்எஃப்) காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.TN news
முதலில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கே.புகழேந்தி என்ற சிறுவன், பின்னர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அவனது உறவினர் மற்றும் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : அடர்த்தியான கூந்தல் வேண்டுமா !



