jallikattu update : ஜல்லிக்கட்டு தேதி மாற்றம் !

ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்

jallikattu update : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.jallikattu update

ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.மற்றும் 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று பெறப்பட்டவர்கள் RT-PCT Test எடுத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் வருகிற 16-ஆம் தேதிக்கு பதிலாக 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார். 16 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் , அவனியாபுரம், பாலமேடு வரிசையில் அலங்காநல்லூரில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியும் ஒத்திவைக்கப்பட்டு திங்கட்கிழமையான 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.