Lata Mangeshkar tests covid positive : லதா மங்கேஷகருக்கு கொரோனா பாதிப்பு !

Lata Mangeshkar's Health : லதா மங்கேஷ்கரின் உடல்நிலை
Lata Mangeshkar's Health : லதா மங்கேஷ்கரின் உடல்நிலை

Lata Mangeshkar tests covid positive : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனாவின் இந்த மூன்றாவது அலையானது திரைப்பட உலகில் மிக வேகமாக செயல்பட ஆரம்பித்துள்ளது.தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, விஷால் தத்லானி, ஸ்வரா பாஸ்கர் போன்றவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சோதனை செய்த பிறகு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன.Lata Mangeshkar tests covid positive

ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை கேட்டதும் பீதி பரவியது. இருப்பினும், இந்தியாவின் நைட்டிங்கேலுக்கு மில்ஸ் அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், தற்போது கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரியவந்துள்ளது.

நவம்பர் 2019 இல், லதா மங்கேஷ்கர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாரத ரத்னா விருது பெற்றவர் பின்னர் நோய்த்தொற்றில் இருந்து மீண்டார்.

இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராகக் கருதப்படும் லதா மங்கேஷ்கர், 2001 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதைப் பெற்றார். லதா மங்கேஷ்கர் பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பல தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.