புதிய தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

தற்போது இருக்கும் ஊரடங்கு நாளையுடன் முடிகிற நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் தொற்று பரவல் உள்ள மாவட்டங்களின் அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வகை 1 – (இதில் 11 மாவட்டங்கள் அடங்கும் )கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் – ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்

வகை 2 என வகைப்படுத்தப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் மளிகை, காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் வணிக சேவை நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதி.

அத்யாவசிய அரசுத் துறைகள் 100% ஊழியர்களுடனும், பிற அரசுத்துறைகள் 50% பணியாளர்களுடனும் செயல்பட அனுமதி.

வகை 3-ல் உள்ள 4 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இதில் வருபவை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள்.