தமிழகத்தில் திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே அனுமதி !

night curfew in goa : கோவாவில் இரவு நேர ஊரடங்கு
கோவாவில் இரவு நேர ஊரடங்கு

கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 வரை தமிழக அரசு அறிவித்துள்ளது.மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு, வகை 2 மற்றும் 3-ல் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.

வகை 2 :அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்( (23 மாவட்டங்கள்)

வகை 3:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.(4 மாவட்டங்கள்)

மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.