தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தது.
தற்போது 9 மாவட்டங்களுக்கான இடஇதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த 31ஆம் தேதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
மேலும் தற்போது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் யார் யாருக்கு ஒதுக்கப்படும் என்று விரிவான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
9 ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்காசி, ராணிபேட்டை பொது பிரிவு பெண்களுக்கும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி பட்டியல் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



