கேரளாவில் அதிகரிக்கும் நிபா வைரஸ் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவியது.பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்த பிறகு தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.மேலும் சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதில் கேரளா மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை மற்ற மாநிலங்களை பொறுத்த வரை அங்கு அதிகமாக உள்ளது.தற்போது நிபா வைரஸும் கேரளாவில் அறியப்பட்டுவருகிறது.

மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களது ரத்தமாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுத்து புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.