tn news : மீண்டும் தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் !

TN news
இனி முகக்கவசம் கட்டாயமில்லை

tn news :  கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.பல ஐரோப்பிய நாடுகள் மிகவும் தொற்றுநோயான புதிய கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்துள்ளன.

இந்தநிலையில், ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துவருகிறது.இந்தநிலையில், கடந்த ஆண்டு போல கொரோனா பாதிப்பு மிகுதியாகி விடக்கூடாது, எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டும் என்று முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.tn news

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.உணவகங்கள், தியேட்டர்கள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பெரும்பாலான செயல்பாடுகள் 50 சதவீதத்துடன் செயல்பட மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் சென்று வழிபட அரசு தடை விதிக்கும் என்று கூறப்படுகிறது.மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பாக இன்று மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Samsung Galaxy S21 mobile : சாம்சங் புதிய மொபைல் !