பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள்

Tirupur-News-Impact-of-teaching-work-by-additional
கற்பித்தல் பணி பாதிப்பு

பள்ளி விடுதிகள் திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- அனைத்து விடுதிகளில் நுழைவு பகுதியில் இரண்டு கிருமிநாசினி பாட்டில்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னரே விடுதிக்குள் வருவதையும் விடுதியில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் தங்கி கல்வி பயில்வதையும் காப்பாளர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.

ஒவ்வொரு விடுதி நுழைவு வாயிலிலும் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை எடுத்து அதற்குரிய பதிவேடு ஏற்படுத்திபதிவு செய்யப்பட வேண்டும் இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் ஆய்வு செய்தல் வேண்டும். தன் சுத்தம் மற்றும் பெருந்தொற்று தடுப்பு பாதுகாப்பு அணுகுமுறைகள் குறித்து தேவையான விழிப்புணர்வினை வழங்கிட வேண்டும்.

விடுதி வளாகங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். மழைக்காலங்களில் விடுதி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதையும் பள்ளங்கள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாக வண்ணம் விடுதிகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விடுதி வளாகத்தில் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து விடுதி வளாகம் சுகாதாரமான சூழலில் செயல்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.

இதையும் படிங்க: பங்கில் பெட்ரோலுடன் கலந்து வந்த தண்ணீர்