மெட்ரோ ரெயிலில் டோக்கனுக்கு பதிலாக டிக்கெட் அறிமுகம்

ரெயிலில் ஏறும் நிலையத்தில் டோக்கன் பெற்று அதை சென்சார் பொருத்திய நுழைவாயிலில் காட்டிவிட்டு செல்ல வேண்டும். இறங்கும் நிலையத்தில் சென்சார் நுழை வாயிலில் அந்த டோக்கனை போட்டால்தான் வாயில் திறக்கும். பின்னர் வெளியேற வேண்டும்.

டோக்கன் பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்பட்டது. இதற்கு செலவு அதிகம். அதுமட்டுமல்ல இப்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக டோக்கன்களை ஒருமுறை பயணிகள் பயன்படுத்தியதும் அதை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

எனவே மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடுதல் இல்லாத பயணத்திற்கான அச்சிடப்பட்ட ‘கியூஆர்’ குறியீடு டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளது. விரைவில் மெட்ரோ ரெயில் பயணிகள் விமான நிலையங்களில் போர்டிங் பாசைப் போன்று காகித டிக்கெட்டை ஒரு பொத்தானை அழுத்தினால் வாங்கலாம்.

ஒரு மெட்ரோ ஸ்டே‌ஷனுக்குள் செல்லும் பயணிகள் டிக்கெட் மெஷின் அல்லது காகித டிக்கெட் டுகளை வாங்கக் கூடிய கவுண்டருக்கு வழங்கப்படும் போர்டிங் பாஸ்களில் அச்சிடப்பட்ட அக்குறியீட்டை போன்ற குறியீட்டை கொண்டு இருக்கும். ஒரு டிக்கெட்டை வாங்கும்போது பிளாட்பாரம் மட்டத்தில் நுழைய, பயணிகள் அவற்றை தானியங்கி கட்டண வசூல் வாயிலில் வைக்க வேண்டும். அவர்கள் தங்கள் பயணத்திற்கு பிறகு ஒரு மெட்ரோ நிலையத்தில் இருந்து வெளியேற அவைகளை தானியங்கி வாயில்களில் வைக்க வேண்டும். அடுத்த சில மாதங்களில் அச்சிடப்பட்ட குறியீட்டு டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக 40 நிலையங்களிலும் எந்திரங்கள் நிறுவப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள்