தமிழக அரசின் 2வது தவணை ரூ.2000 நிவாரணம் குறித்து முதல்வர் ஆலோசனை !

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த பொதுமுடக்க காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதற்காக கடந்த 15 ஆம் தேதிக்கு மேல் நிவாரண நிதிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு, அனைத்து ரேஷன் கடைகளிலும் 2000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் 3 ஆம் தேதிக்குள் இரண்டாவது தவணை நிவாரண நிதி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் 2 ஆம் தவணை கொரோனா நிவாரண நிதியாக, 2000 ரூபாய் வழங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜூன் மாதத்தில் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.