அரசு ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு !

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அம்சங்கள் இருந்தன.

இதில் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.கடந்த 2016-ம்ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டது.

அரசு பணியில் உள்ள மகளிருக்கான பேறுகால விடுப்பை 12 மாதமாக உயர்த்தியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது மகளிர் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.