கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கும் திட்டம் தொடக்கம் !

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் நலனுக்காக தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செலுத்தவும், அவர்களுக்கு18 வயது நிறைவடையும் போது வட்டியுடன் முழு தொகையும் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும், உறவினர்கள் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்ச ரூபாய் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.