தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது !

கோவாவில் இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.தொற்று எண்ணிக்கை குறையவில்லை என்பதால் மேலும் ஒரு வார காலம் தீவிரமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. இன்று முதல் ஊரடங்கு நீட்டிப்பில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. காய்கறி ,மளிகை கடைகள், எலக்ட்ரிகல்ஸ், ஹார்ட்வேர்ஸ், வாகன உதிரிப்பாகம் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தொடரும்.

காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் மாலை 5 மணி வரை செயல்படலாம் . காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி வரை செயல்படலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத பத்திரப்பதிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறையாத 11 மாவட்டங்களில் வாடகை, ஆட்டோ, கார்களுக்கு தடை தொடர்கிறது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சுயதொழில், கார், பைக் பழுதுபார்க்கும் கடைகள் செயல்பட அனுமதி இல்லை.