TN cm stalin booster shot : பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின் !

mega sport city
விளையாட்டு வீரர்களுக்காக மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

TN cm stalin booster shot : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஜன. 14 முதல் ஜன. 18 வரை வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி இல்லை.
ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.TN cm stalin booster shot

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : TN news : தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் குறித்த விபரம் !