தமிழக ஊரடங்கு குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை !

urban-local-bodies-election-dmk-bags-a-mega-victory
திமுக கூட்டணி மகத்தான வெற்றி

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 23ம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் ஊரடங்கு நீளுமா என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை.

மேலும் ஊரடங்கு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு தன் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்று தெரிவிக்கப்படும்.மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், மூன்றாம் அலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளது.