தமிழக அரசின் அடுத்த அதிரடி..மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை !

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக அறிவித்துவருகிறது.மேலும் இந்த கொரோனா தொற்று இருக்கும் கடுமையான நிலையிலும் தமிழக அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது.

தற்போது கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அதற்காக நிதி ஒதுக்கப்படும் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

மேலும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் என்றும் அவரை சேகர்பாபு என்று அழைப்பதை விட ‘செயல்பாபு’ என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் தமிழக முதல்வர்.