நடிகர் சாய் தரம் தேஜ் தெலுங்கில் முன்னணி நடிகருள் ஒருவர். தனது ஸ்போர்ட் பைக்கில் சென்ற சாய் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார்.
சுயநினைவை இழந்த இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்தில் அவருக்கு தோள்பட்டை மற்றும் நெஞ்சுப்பகுதி ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறியது,அவரது முக்கிய பாகமான மூளை மற்றும் மற்ற இடங்களில் காயம் இல்லை என்றும்.தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்கின்றனர்.



