கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன.மேலும் பள்ளிகள் எப்போது திறக்கும் என பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் பள்ளிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் செப்.,1ம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.
செப் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா தொற்று இருப்பதால் புதிய நெறிமுறைகளை பின்பற்றப்படும் என்று தெரிவித்தது.
செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
மேலும் பள்ளிகள் திறக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்று எய்ம்ஸ் பேராசிரியர் நவீத் விக் தெரிவித்தார்.தற்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.



