வருகிற 7-ந்தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம்- சீமான்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும், சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது என்றும் சீமான் அறிவித்துள்ளார்.

வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிட இருக்கிறோம்.

அந்நிகழ்வில் பெருந்திரளெனக் கூடி, நமது வெற்றியை முரசறிவிக்க வேண்டுமென இனமானத் தமிழர்களை அழைக்கிறோம். இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம். புரட்சி எப்போதும் வெல்லும், நாம் தமிழர் ஆட்சி அதனைச் சொல்லும்.