தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு..சாதிகள் ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு !

cm-mk-stalin-visit-dubai-for-expo-2020
சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியார் வரிகள் அனைவர்க்கும் தெரியும்.ஆனால் இந்த வரிகளை தங்கள் வாழ்வில் கடைபிடிப்பவர்கள் கடினம்.

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக அறிவித்து வருகிறது.இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியது,திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எப்போது அமைகின்றதோ, அப்பொழுதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் பாடுபடுகிற அரசாக திமுக அரசு விளங்கியிருக்கிறது” என்று, குறிப்பிட்டார்.

இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்” என்றும், அவர் அறிவித்தார்.