’ஜவான்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் நடிகர் விஜய்..!

ஷாருக்கான் – அட்லீ இணையும் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

’ஜவான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, விஜய், பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் ’ரவுடி ரத்தோர்’படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.