Tn news update : திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.தனது வீட்டில் இருந்து இன்று சைக்கிளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு செல்கிறார்.
சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் ப.காயத்திரி கிருஷ்ணன் இன்று தனது முகாம் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
கலெக்டர் அலுவலக கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட கலெக்டர் 20 நிமிடத்தில் தனது அறையை அடைந்தார். அலுவலகத்தில் இருந்த அவரது உதவியாளர்கள், தாசில்தார், ஆயுதம் ஏந்திய காவலர்களும் சைக்கிள் மூலம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தனர். Tn news update
ஆட்சியரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே வியப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.



