School Holiday: தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறை

Tirupur-News-Impact-of-teaching-work-by-additional
கற்பித்தல் பணி பாதிப்பு

School Holiday: நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

தமிழகத்தில் டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு. பள்ளிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணிப்பதே தடுக்க கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைவெளியின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க: Bank Holiday: இந்த 6 நாட்கள் வங்கிகள் செயல்படாது

Bank Holiday: ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் வந்தாலே விடுமுறைகளும் வந்துவிடும். குறிப்பாக கிறிஸ்துமஸ் தொடங்கிய புத்தாண்டு வரை ஒரு வாரத்திற்கு விடுமுறை தான். வங்கிகளுக்கும் தான். டிசம்பர் மாதம் முடிந்து புத்தாண்டு தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே மிச்சம் உள்ளன.

இதில் ஆறு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் இதனால் பொதுமக்களின் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது.

சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கலாம். மற்ற மாநிலங்களில் இருக்காது. அந்த வகையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

டிசம்பர் 24 – கிறிஸ்துமஸ் ஈவ்

டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்

டிசம்பர் 26 – ஞாயிறுக்கிழமை பொது விடுமுறை

டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (மிசோரம் மாநிலத்தில் மட்டும்)

டிசம்பர் 30 – யூ கியாங் நங்பா (இமாச்சலப் பிரதேச மாநில வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

டிசம்பர் 31 – நியூ இயர் ஈவ் (மிசோரம் மாநிலத்தில் மட்டும்)

விடுமுறை நாட்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுகொண்டுள்ளது. எனினும் ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும். ஆகவே நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டிய திட்டம் இருந்தால் மட்டும் வங்கிகள் இருக்குமா இல்லை விடுமுறையா என்று தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: Omicron in Tamil Nadu: தமிழகத்தில் வேகமாக பரவும் ஒமைக்ரான்