உங்கள் சருமம் ஈரப்பதத்தோடு இருப்பதற்கு இதோ சில டிப்ஸ் !

சருமத்தில் ஈரப்பதம் இருந்தால்தான் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம்.ஈரப்பதம் இல்லை என்றல் சருமத்தில் சுருக்கங்கள் விழுந்து வயதான தோற்றத்தை தரும்.இதை வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மூலம் பெறலாம்.

என்னதான் சருமத்தின் மீது நீங்கள் அக்கறை செலுத்தினாலும்.உட்கொள்ளும் உணவும் மிகவும் முக்கியம்.ஆரோக்கியமான மற்றும் நார் சத்து அதிகம் உள்ள பொருட்களை உட்கொள்ளவேண்டும்.தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.இது நம் உடம்பில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

குளிக்க செல்லும் முன்பு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது அல்லது ஜோஜோபா எண்ணெய் இவைகளில் ஏதாவது ஒன்றை கொண்டு முகத்தில் மசாஜ் செய்துக்கொள்ளலாம்.

தயிர் ஒரு ஸ்பூன் இதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பேக் போடலாம்.இப்படி செய்வதன் மூலம் முகத்திற்கு நல்ல ஈரப்பதம் கிடைக்கும்.

தேனைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் இருக்கும் முகப்பருக்கள் நீங்கும்.மேலும் இது சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகும்.