திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா- வெளியூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வர தடை

திருவண்ணாமலையில் வரும் 29ம் தேதி  கார்த்திகை தீபத் திருவிழா நடக்க உள்ள சூழ்நிலையில் இந்த ஆண்டு கொரொனா தொற்று காரணமாக வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் திருவண்ணாமலைக்கு வருவதற்கு கோவில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறையினரும் தடை விதித்துள்ளனர்.

இதன் காரணமாக. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலை கிரிவலம் வந்து மலயை சுற்றி செல்வார்கள்.

அதேபோல உள்ளூரை சேர்ந்தவர்களும் கூட்டம் சேர்வதற்கும் தடை விதிக்கப்பட்டு கிரிவலமும் அல்லது பூஜை நடக்கும் பட்சத்தில் அவர்களது வீட்டில் இருந்தபடியே தரிசனம் செய்ய வேண்டும் என கோரி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது